BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
செளதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேச இளைஞர் பற்றி இதுவரை தெரிந்தது என்ன?
சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்தார்.
செவ்வாயின் நிலவுகள் எங்கிருந்து வந்தன? 450 கோடி ஆண்டுகால புதிருக்கு விடை தேடும் விண்கலம்
செவ்வாய் கிரகத்தின் நிலவுத் துகளில் 10 கிராமை பூமிக்குக் கொண்டுவரும் ஒரு லட்சியத் திட்டத்திற்காக, விண்கலம் ஒன்று ஏவப்பட உள்ளது.
பிரான்ஸில் என்ன நடக்கிறது? வன்முறை, அரசியல் மோதல், அதிகரிக்கும் அதிருப்தியின் பின்னணி
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறைவதைக் கண்டித்து பிரான்ஸில் நடந்த போராட்டங்கள் வன்முறை, கொள்ளைச் சம்பவங்களாக மாறியுள்ள நிலையில், அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான விமர்சனங்களும் அரசியல் மோதல்களும் அதிகரித்துள்ளதால் மக்ரோங் அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
சேவாக்கை இன்றும் மறக்க முடியாத வீரராக்கிய 6 விஷயங்கள்
சேவாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் குவிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அளவிட்டு விட முடியாது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ராகுல் பட்டாச்சார்யா. "சேவாக்கின் அதிரடி ஆட்டம் சக பேட்டர்களுக்கு நெருக்கடியை குறைத்தது. சேவாக் வேகமாக ரன் சேர்த்த போட்டிகளில் சச்சின் பொறுமையாக விளையாடினார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடும் பொறுப்பை சேவாக்கிடம் எடுத்துக் கொண்டதால் சச்சின் ரன் குவிப்பதில் கவனம் செலுத்தினார்." என்கிறார் அவர்.
கொலம்பசுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவை அடைந்த வைக்கிங் மக்களின் வரலாறு
நோர்ஸ் மக்கள் கி.பி. 1000-ஆம் ஆண்டிலேயே கனடாவை அடைந்தனர், மேலும் அதனை ஆய்வு செய்வதற்கான தளமாகவும் பயன்படுத்தினர். அட்லான்டிக் கடலைக் கடந்த முதல் ஐரோப்பியர்களின் "மறைக்கப்பட்ட வரலாற்றை" பிபிசி ஆராய்ந்துள்ளது.
'நெற்றியில் முத்தம்', 'பார்ட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டம்' என சலுகைகள்: வாடகைக்கு கர்பா நடன பார்ட்னரை தேடுவதன் பின்னணி
நவராத்திரியின்போது கர்பா நடனக் கூட்டாளிகளை வாடகைக்கு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிய விளம்பரங்களை ஆய்வு செய்த பிபிசி, 99 ரூபாய் கட்டணம் வசூலித்துப் போலியான சேவை மூலம் மோசடி செய்வதுடன், தனிப்பட்ட தகவல்களையும் தவறாகப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதைக் கண்டறிந்தது.
சீனாவும் ஏ.ஐ.யும் உலக நிதித்துறை தலைவர்களை கவலைப்படுத்துவது ஏன்?
பேங்காக் நகரில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) கூட்டத்தில், நிதி மற்றும் வணிகத் துறைத் தலைவர்கள் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டனர்.
மெக்காவில் 'தகாத செயல்' குற்றச்சாட்டில் இருவருக்கு மரண தண்டனை - வங்கதேசத்தில் என்ன விவாதிக்கப்படுகிறது?
மெக்காவில் உள்ள மசூதியில் "தகாத" செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசத் தம்பதிக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் எதிர்வினைகள் வந்துள்ளன.
'இறந்த குட்டி யானையை சுமந்து சென்ற பெண் யானை' - மனதை உலுக்கும் காட்சியை புகைப்படம் எடுத்த கலைஞர் பகிரும் அனுபவம்
2026-ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற புகைப்படம், யானைகளின் உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கையின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அரிதாகக் காணப்படும் அவற்றின் ஓர் நடத்தையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
டைகர் ஷெராஃப் மீதான தாக்குதல்: 3 பேர் கைது; 'நேபாளத்துக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாக' காவல்துறை தகவல்
ராஜஸ்தானின் கோட்டா நகரில், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவரை இன்று (அக்டோபர் 19) காவல்துறையினர் கைது செய்தனர்.
மனிதர்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிக்கும் கேமராக்கள் - புதிய தொழில்நுட்பங்களும் நிபுணர்கள் எழுப்பும் கவலைகளும்
கண்காணிப்பு கேமராக்கள் மனிதர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் குற்றங்களின் விசாரணைகள் மேம்பட்டுள்ள போதிலும் நிபுணர்கள் இதில் தனியுரிமை தொடர்பான கவலைகளையும் எழுப்புகின்றனர்.
தேங்காயையே உடைக்கும் ராட்சத நண்டுகள் வாழும் தீவில் 90 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானியைத் தேடும் முயற்சி
புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் முயற்சியின்போது மாயமானார். அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் தொலைதூரத் தீவில் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சென்றடைந்துள்ளது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இலங்கை: ஒரு புறம் 19 இரானிய கப்பல்கள், மறுபுறம் அமெரிக்க போர்க்கப்பல் - திரைமறைவில் ராஜதந்திர நகர்வுகள்
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ள சம்பவம், நாட்டின் அரசியல், ராஜதந்திர மற்றும் வணிகத் துறைகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் ஜென் ஸி அணுகுமுறையால் மாறும் சூழல் அரசியல் மாற்றத்திற்கு வித்திடுமா?
"இன்று வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பாஜக வாக்காளர்களின் குழந்தைகள். அவர்களின் பெற்றோர் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். இந்தப் பிரிவில் பெரும்பான்மையான பெண்களின் வாக்குகளும் அடங்கும். குறிப்பாக, இந்தப் பெண்கள்தான் நரேந்திர மோதியின் ஆதரவுத் தளத்தை உருவாக்கினர்"
எல்நினோ எதிரொலி: இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா?
எல் நினோ தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், 2026–27ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுநீர் வெளியேற தாமதம், கழித்த பிறகும் முழுமையடையாத உணர்வு போன்ற அறிகுறிகள் உள்ளனவா? ஆண்களுக்கான 8 முக்கிய விஷயங்கள்
ஆண்களுக்கு சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவது, சிறுநீர்க்குழாய் குறுகுவது, புரோஸ்டேட் தொற்று மற்றும் சிறுநீர்ப்பை நோய் ஆகியவற்றை மருத்துவர்கள் எவ்வாறு வேறுபடுத்திக் கண்டறிகின்றனர்? உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அறிகுறிகள் எவை? இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
உங்கள் ஓட்டுநர் உரிமம் எந்த 6 விதிமீறல்களுக்காக இடைநீக்கம் செய்யப்படலாம் தெரியுமா?
எத்தகைய விதிமீறல்கள் நடக்கும்போது ஒருவரின் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும், எப்போது ரத்து செய்யப்படும்? செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படுமா?
'வெற்றிப் பயணம்': தமிழ்நாட்டில் பெண்கள் எந்தெந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்?
வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் ஒருவர் எவ்வளவு தூரம் பயணம் செய்யலாம், எந்தெந்த பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று இந்த கட்டுரை விவரிக்கிறது.
தமிழக இளைஞரை காதல் மணம் புரிந்த இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு என்ன சிக்கல்?
"என்னுடைய சிறு வயதிலேயே என் தாயார் இறந்துவிட்டதால் விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். 12ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு தந்தையுடன் தங்கியிருந்த போது அருண்குமாரை சந்தித்தேன். அவருடன் இந்தியாவில் வாழ்வது என முடிவெடுத்தேன்"
சௌதியிடம் 'நபிகள் மன்னித்ததை நினைவுபடுத்திப் பேச வேண்டும்' - சிவராசா அனோஜனை மீட்க இருக்கும் வழிகள்
நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, சௌதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன் என்ற இலங்கையருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. அவரை மீட்க இருக்கும் வழிகள் என்ன?
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை
இந்திய விமானப் பணியாளர்களின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சம்பவமும் உள்ளது. அது நீரஜா பானோட்டின் கதை. 1986-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் ஆம் விமானத்தில் அவர் மூத்த விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார் . தனது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலால் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய நீரஜா, கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தானும் பலியானார்.
ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை இரான் இழந்துவிட்டதா? எண்ணெய் ஏற்றுமதி தரவு உணர்த்தும் உண்மை
கடந்த சில வாரங்களாகப் பாரசீக வளைகுடாவில் உள்ள அரபு நாடுகள், எண்ணெய் டேங்கர்களின் நடமாட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், மாற்றுப் பாதைகளைப் பெருமளவில் பயன்படுத்துவதன் மூலமும் தங்களின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்கு மீட்டமைக்க முடிந்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை இரான் இழந்துவிட்டதா?
அமெரிக்கா படையெடுத்தால் அதை எதிர்கொள்ள கனடா எவ்வாறு தயாராகிறது?
கனடாவின் மீது அமெரிக்கா படையெடுப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது குறித்த ராணுவ ஒத்திகைகளை நடத்தி வருவதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்
'சுமார் 500 மரண தண்டனையை நேரில் பார்த்துள்ளேன். ஆனால் இதைப் போன்ற ஒன்றை ஒருபோதும் பார்த்ததில்லை'
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற சுமார் 500 மரண தண்டனைகளை செய்தியாளராக மைக்கேல் கிராசிக் நேரில் பதிவு செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டு அசோசியேட்டட் பிரஸ்ஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் மரண தண்டனைகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































