BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
"ஏமாற்ற முயலும் எந்தவொரு நாடும்.."-டிரம்பின் அச்சுறுத்தல் இந்தியாவை இலக்காகக் கொண்டதா?
கடந்த வாரம், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் டிரம்பின் உலகளாவிய வரிகளை ரத்து செய்தபோது, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் என்று தோன்றியது.
நேரலை, புதிய கட்சியை அறிவித்தார் சசிகலா - "கொடி அறிமுகம், பெயர் பின்னர் அறிவிப்பு"
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
பொள்ளாச்சி: 16 வயது சிறுமி மற்றும் பாட்டி கொலை – திருமண வற்புறுத்தல் குற்றச்சாட்டில் இளைஞர் கைது
இதே சம்பவத்தில் கல்லூரி மாணவியான சிறுமியின் அக்காவும் காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் நலமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை எதிர்கொண்டுள்ள திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் கூட்டணி கட்சிகள், கடந்த முறையை விட கூடுதல் இடங்களைக் கேட்பதாகவே தெரிவித்துள்ளன. அத்துடன், கூட்டணியில் சேர்ந்த புதிய கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டிய இரட்டை சவாலை திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?
"இந்திய அணியின் தோல்விக்கு காரணம்.." - அக்சர் படேலை சுற்றி நடக்கும் விவாதம் என்ன?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆமதாபாத் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்த ஆல்ரவுண்டர் அக்சர் படேலை நீக்கிவிட்டு 'மேட்ச்-அப்' உத்திகளின் அடிப்படையில் அணி தேர்வு செய்யப்பட்டதே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
துர்நாற்றத்துடன் 'வாயு' வெளியேற காரணம் - உங்கள் குடல் உணர்த்தும் அறிகுறி என்ன?
சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர். பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
காணொளி, காணொளி: பழுப்பு நிறத்தில் விளையும் பருத்தி அறிமுகம் , கால அளவு 3,15
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்த புதிய வகை பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது மழையென பொழிந்த ஸ்கட் ஏவுகணைகள்
1989ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று காலை, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான தோர்காமில் இருந்த தபால் நிலையத்தை அழித்த சோவியத் ஸ்கட் ஏவுகணை, காபூலில் இருந்து ஏவப்பட்டது.
இந்தியாவுக்காக அண்ணன், பாகிஸ்தானுக்காக தம்பி என எதிரெதிரே நின்று சகோதரர்கள் போரிட்ட வரலாறு
1947-ல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, மூத்த சகோதரர் சாஹிப்ஜாதா யூனுஸ் கான் இந்திய ராணுவத்திலேயே இருக்க முடிவு செய்தார். அதேசமயம் அவரது இளைய சகோதரர் சாஹிப்ஜாதா யாகூப் கான் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.
செவ்வாய்க்குப் பதிலாக நிலவில் முதலில் ஒரு நகரை நிறுவுவது என ஈலோன் மஸ்க் தனது திட்டத்தை மாற்றியது ஏன்?
எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைவரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான ஈலோன் மஸ்க், ஒரு நிலவு நகரத்தை '10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்' சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் அது யதார்த்தமானதா?
3 இஸ்லாமிய முதியவர்களை தாக்கும் இளைஞர் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
உத்தரபிரதேசத்தில் 3 இஸ்லாமிய முதியவர்களை இளைஞர் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் தாக்கியவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஓசூரில் அரசு ஊழியர் 'கார் ஏற்றி கொலை' - திமுக நிர்வாகி மகன் கைது குறித்து காவல்துறையின் விளக்கம்
அரசு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகியின் மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இந்தியாவில் ரயில்களில் 'பயணிக்கும்' ராஜநாகங்கள் - புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடமாக உள்ளன. ராஜநாகம் பொதுவாகக் காடுகளில் வாழ்கிறது, ஏனெனில் அங்கு அதற்குத் தேவையான இரை, நீர் மற்றும் பாதுகாப்பான இடம் கிடைக்கிறது.
எகிப்தில் மன்னர் பள்ளத்தாக்கில் கிரேக்கத்துக்கு மேலே தமிழை பொறித்த 'சிகை கொற்றன்' யார்?
எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எழுதியது யார்?
அரவிந்தர் கோஷ் புதுச்சேரி வந்தது ஏன்? சுதந்திர போராட்ட வீரர் ஆன்மீகவாதியான கதை
1893-ல் அரவிந்தர் இந்தப் பெயரைத் தனது பெயரிலிருந்து நீக்கினார். 1879-இன் மத்தியில், கிருஷ்ண தன் தனது முழு குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றார்.
பெரிய மார்பகங்கள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம்?
உலகின் பல பகுதிகளில் பெரிய மார்பகங்கள் இருப்பது கவர்ச்சிகரமான விஷயமாக கருதப்பட்டாலும், உண்மை கடினமானதாக உள்ளது. பெண்களின் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் அது குறிப்பிடத்தக்க பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கோவையில் காண்டாமிருகம் வாழ்ந்ததா? தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஆதாரம்
சமீபத்தில் கோவை அருகே நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த எலும்பு காண்டாமிருகத்துடையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது இன்னமும் நிரூபிக்கப்ப வேண்டியது உள்ளது என விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"ராஜராஜ சோழனின் உண்மையான பெயர்" ; சோழர்கள் வடமொழியில் பெயர் சூட்டிக் கொண்டனரா?
சோழ மன்னர்களின் காலம், அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நிலவுடைமை, சமூகத்தின் எந்தப் பிரிவுக்குச் சாதகமாக இருந்தார்கள் என்பதெல்லாம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்துவருகின்றன.
ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது - என்ன நடந்தது?
இந்த வழக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாவட்டத்தின் பல்க்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்சமுந்த் காகட் கிராமத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையைத் திருடியது தொடர்பானது.
சௌதி அரேபியா லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க தீர்மானித்தது ஏன்?
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. நாட்டின் இந்த விலைமதிப்பற்ற விலங்குகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வங்கதேசத்துடன் அமெரிக்கா செய்த வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?
அமெரிக்கா - வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான சில மணிநேரங்களிலேயே, இந்திய ஜவுளி மற்றும் பருத்தி நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக வீழ்ச்சியடைந்தன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆடை சந்தையில் இந்தியாவின் நிலை பலவீனமடையக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்படுகின்றன.
சார்ல்ஸ் டார்வின் 'கடவுளை கொன்று' பரிணாம கோட்பாட்டை கண்டுபிடிக்க வித்திட்ட பீகிள் கடற்பயணம்
இயற்கை விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின் தனது பரிணாமவியல் கோட்பாட்டைக் கண்டுபிடிக்க தொடக்கப் புள்ளியாக இருந்தது பீகிள் கடற்பயணம். அந்தப் பயணத்தில் அவர் என்னவெல்லாம் பார்த்தார், எப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்றார்?
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையறை அற்ற வேலைக்கான உரிமம் பெறுவதற்கான கால அளவு 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளர். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்





























































































