பனாமா
பனாமா குடியரசு Republic of Panama República de Panamá | |
|---|---|
| குறிக்கோள்: Pro Mundi Beneficio (இலத்தீன்) "உலக நன்மைக்காக" | |
| நாட்டுப்பண்: Himno Istmeño (எசுப்பானிய மொழி) "இசுத்மியனின் பண்" | |
| தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பனாமா நகரம் 8°58′N 79°32′W / 8.967°N 79.533°W |
| ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் |
| பிராந்திய மொழிகள் | குவாய்மி பக்லெரே எம்பெரா வூனான் குனா தெரைபு பிரைபிரை |
| இனக் குழுகள் (2020)[1] |
|
| சமயம் (2020)[2] |
|
| மக்கள் | பனாமானியர் |
| அரசாங்கம் | ஒற்றையாட்சி தலைவர் ஆளும் அரசு முறைமை |
• அரசுத்தலைவர் | ஒசே ரவூல் முலீனோ |
| சட்டமன்றம் | தேசியப் பேரவை |
| விடுதலை | |
• எசுப்பானியப் பேரரசிடம் இருந்து | நவம்பர் 28, 1821 |
• பாரிய கொலம்பியாவுடன் இணைவு | திசம்பர் 1821 |
• கொலம்பியா குடியரசில் இருந்து விலகல் | நவம்பர் 3, 1903 |
• நடப்பு அரசியலமைப்பு | அக்டோபர் 11, 1972 |
| பரப்பு | |
• மொத்தம் | 75,417 km2 (29,119 sq mi)[3][4] (116-ஆவது) |
• நீர் (%) | 2.9 |
| மக்கள் தொகை | |
• 2022 மதிப்பீடு | |
• அடர்த்தி | 56/km2 (145.0/sq mi) (122-ஆவது) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மொ.உ.உ. (பெயரளவு) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| ஜினி (2023) | உயர் |
| மமேசு (2023) | அதியுயர் · 59-ஆவது |
| நாணயம் |
|
| நேர வலயம் | ஒ.அ.நே−5 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)) |
| திகதி அமைப்பு | மா/நா/ஆ நா/மா/ஆ |
| வாகனம் செலுத்தல் | வலம் |
| அழைப்புக்குறி | +507 |
| ஐ.எசு.ஓ 3166 குறியீடு | PA |
| இணையக் குறி | .pa |
பனாமா (Panama, [a] அதிகாரபூர்வமாக பனாமா குடியரசு (Republic of Panama) என்பது வட அமெரிக்காவில் நடு அமெரிக்காவின் தென் முனையில் தென் அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக, மேற்கே கோஸ்ட்டா ரிக்கா, தென்கிழக்கே கொலம்பியா, வடக்கே கரிபியக் கடல், தெற்கே பசிபிக் பெருங்கடல் ஆகியன உள்ளன. இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் பனாமா நகரம் ஆகும். பனாமா நகரின் பெருநகர்ப் பகுதியில் நாட்டின் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் வசிக்கின்றனர்.[9][10]
16-ஆம் நூற்றாண்டில் எசுப்பானியக் க்டியேற்றவாதிகள் வருவதற்கு முன்பு, பனாமாவில் பல்வேறு பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இது 1821-இல் எசுப்பானியாவில் இருந்து பிரிந்து, புதிய கிரனாடா, எக்குவடோர், வெனிசுவேலா ஆகியவற்றின் ஒன்றியமான பாரிய கொலம்பியாக் குடியரசில் இணைந்தது. 1831-இல் பாரிய கொலம்பியா கலைக்கப்பட்ட பிறகு, பனாமாவும் புதிய கிரனாடாவும் இறுதியில் கொலம்பியாக் குடியரசாக மாறின. அமெரிக்காவின் ஆதரவுடன், பனாமா 1903-இல் கொலம்பியாவிலிருந்து பிரிந்தது. இது, 1904 இற்கும் 1914 இற்கும் இடையில் அமெரிக்க இராணுவப் பொறியியயாளர் படையால் பனாமா கால்வாய் கட்டுமானத்தை முடிக்க வழிவகுத்தது. 1977-ஆம் ஆண்டின் டொரியோசு-கார்ட்டர் ஒப்பந்தங்கள், 1999 திசம்பர் 31 அன்று கால்வாயை அமெரிக்காவிலிருந்து பனாமாவுக்கு மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டன.[11] சுற்றியுள்ள பிரதேசம் முதலில் 1979-இல் திருப்பி அளிக்கப்பட்டது.[12]
பனாமாக் கால்வாய் சுங்கவரிகளிலிருந்து கிடைக்கும் வருவாய், குறிப்பாக, 2016-இல் நிறைவடைந்த பனாமாக் கால்வாய் விரிவாக்கத் திட்டம் அதன் கொள்ளளவை இரட்டிப்பாக்கிய பிறகு, பனாமாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.[13] வணிகம், வங்கி, சுற்றுலா ஆகியவை முக்கிய துறைகளாகும். பனாமா அதிக வருமானம் ஈட்டும் பொருளாதாரத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.[14] 2019-இல், மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் அடிப்படையில் பனாமா உலகில் 57-ஆவது இடத்தைப் பிடித்தது.[15] 2018 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டின்படி, இலத்தீன் அமெரிக்காவில் பனாமா ஏழாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டது.[16] 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டில் பனாமா 82-ஆவது இடத்தைப் பிடித்தது.[17][18] அதன் நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதத்தை உள்ளடக்கிய பனாமாவின் அடர் காடுகள், ஏராளமான வெப்பமண்டலத் தாவரங்கள், விலங்குகளின் தாயகமாக உள்ளன - அவற்றில் சில பூமியில் வேறு எங்கும் காணப்படுவதில்லை.[19]
பனாமா ஐக்கிய நாடுகள் அவை, அமெரிக்க நாடுகள் அமைப்பு, இலத்தீன் அமெரிக்க ஒருங்கிணைப்பு சங்கம், ஜி77 குழு, உலக சுகாதார அமைப்பு, கூட்டுசேரா இயக்கம் போன்ற பிற பன்னாட்டு அமைப்புகளின் நிறுவன உறுப்பினராகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ (/ˈpænəmɑː/ (ⓘ), IPA: [panaˈma] ⓘ)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Panama". CIA World Factbook. February 4, 2022. Archived from the original on January 23, 2021. Retrieved January 24, 2021.
- ↑ "Segunda Encuesta Nacional de Hogares, Panama 2015". Ministerio Público de la República de Panamá. December 2016. http://ministeriopublico.gob.pa/wp-content/multimedia/2017/09/Encuesta-de-Hogares-2015-16-viii-17-publicaci%C3%B3n-digital.pdf. பார்த்த நாள்: February 17, 2019.
- ↑ "Demographic Yearbook – Table 3: Population by sex, rate of population increase, surface area and density" (PDF). United Nations Statistics Division. 2012. Archived (PDF) from the original on August 26, 2020. Retrieved September 4, 2017.
- ↑ "United Nations Statistics Division - Demographic and Social Statistics". unstats.un.org. Archived from the original on October 15, 2017. Retrieved May 21, 2021.
- ↑ "Panama". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2026 ed.). நடுவண் ஒற்று முகமை. 2022. Retrieved September 24, 2022. (Archived 2022 edition)
- ↑ 6.0 6.1 6.2 6.3 "World Economic Outlook Database, October 2024 Edition. (Panama)". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். 10 October 2024. Archived from the original on November 9, 2024. Retrieved 2 January 2025.
- ↑ "Gini Index coefficient". த வேர்ல்டு ஃபக்ட்புக். Archived from the original on July 17, 2021. Retrieved September 24, 2024.
- ↑ "Human Development Report 2025" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Archived (PDF) from the original on 6 May 2025. Retrieved 6 May 2025.
- ↑ "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. Retrieved July 17, 2022.
- ↑ "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. Retrieved July 17, 2022.
- ↑ "Panama". CIA – த வேர்ல்டு ஃபக்ட்புக். Archived from the original on January 23, 2021. Retrieved December 23, 2010.
- ↑ Department of State, United States of America (1987) [Signed at Washington on September 7, 1977. Entered into force October 1, 1979.]. "Panama Canal Treaty". United States Treaties and Other International Agreements. Vol. 33. United States Department of State. p. 55. 33 UST 39; TIAS 10030. Archived from the original on January 24, 2024. Retrieved September 13, 2020.
Upon entry into force of this Treaty, the United States Government agencies known as the Panama Canal Company and the Canal Zone Government shall cease to operate within the territory of the Republic of Panama that formerly constituted the Canal Zone.
- ↑ "25 Years since the Transfer of the Panama Canal | AS/COA". www.as-coa.org (in ஆங்கிலம்). 2024-12-24. Retrieved 2026-01-17.
- ↑ "World Economic Outlook Database, April 2019". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். Archived from the original on December 22, 2019. Retrieved September 29, 2019.
- ↑ Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (PDF). United Nations Development Programme. December 15, 2020. pp. 343–346. ISBN 978-92-1-126442-5. Archived (PDF) from the original on December 15, 2020. Retrieved December 16, 2020.
- ↑ "Competitiveness Rankings". The Global Competitiveness Report 2018 (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved March 18, 2019.
- ↑ "GII Innovation Ecosystems & Data Explorer 2025". WIPO. Retrieved 2025-10-16.
- ↑ Dutta, Soumitra; Lanvin, Bruno (2025). Global Innovation Index 2025: Innovation at a Crossroads (in ஆங்கிலம்). உலக அறிவுசார் சொத்து நிறுவனம். p. 19. doi:10.34667/tind.58864. ISBN 978-92-805-3797-0. Retrieved 2025-10-17.
- ↑ "Country profile: Panama". BBC News. June 30, 2010 இம் மூலத்தில் இருந்து July 2, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140702022612/http://news.bbc.co.uk/2/hi/americas/country_profiles/1229332.stm.
வெளி இணைப்புகள்
[தொகு]- Panama from BBC News
- Wikimedia Atlas of Panama
